தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கார் கவிழ்ந்து விபத்துபெண் டாக்டர் உயிர்தப்பினார்


தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கார் கவிழ்ந்து விபத்துபெண் டாக்டர் உயிர்தப்பினார்
x

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கார் கவிழ்ந்த விபத்தில் பெண் டாக்டர் காயத்துடன் உயிர்தப்பினார்

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கார் கவிழ்ந்த விபத்தில் பெண் டாக்டர் காயத்துடன் உயிர்தப்பினார்

பெங்களூரு அருகே உள்ள மடிவளா பகுதியை சேர்ந்தவர் மனிஷா (வயது 32). டாக்டரான இவர் வேலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

நேற்று டாக்டர் மனிஷா தனது காரில் பெங்களூருவில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென டாக்டரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் டாக்டர் மனிஷா காருக்குள் சிக்கிக்கொண்டார்.

தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த டாக்டர் மனிஷாவை சிறு காயங்களுடன் மீட்டனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story