வீட்டுமனை தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வீட்டுமனை தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

வீட்டுமனை தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வீட்டுமனை தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி வரலட்சுமி (வயது 56). கோவிந்தராஜனுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே வீட்டு மனை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த வரலட்சுமி ஆராசூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் வரலட்சுமி அந்த வீட்டின் குளியலறையில் புடவையில் தூக்குப்போட்டுக்கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு வரலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதுகுறித்து கோவிந்தராஜன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story