குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிபட்டு நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 38). கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தாகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி சக்தி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சக்தி தனது மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவிரக்தி அடைந்த தனலட்சுமி வீட்டின் அறையில் தூக்குப்போட்டுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.