குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள என்.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி அன்னக்கொடி (வயது 25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இதுவரை குழந்தை இல்லை. இதனால் அன்னக்கொடி கடந்த சில வாரங்களாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனம் உடைந்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அன்னக்கொடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்னக்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமை ஏதேனும் நடந்துள்ளதா? என பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story