சாத்தான்குளத்தில்பெண் தூக்குபோட்டு தற்கொலை
சாத்தான்குளத்தில்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஆர்.சி.வடக்கு தெருவை சேர்ந்த கார்மேகம் மனைவி சாந்தி (வயது 55). இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மகள் முத்துபேச்சியுடன் அவர் வசித்து வந்தார். சில ஆண்டுகளாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். தற்போது அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு நெல்லையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாக மகள் வீட்டில் தங்கியிருந்த சாந்தி நேற்று முன்தினம் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகள் முத்துப்பேச்சி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story