கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்
கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள கெங்கரை கோவில்மட்டம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி கிருஷ்ண குமாரி (வயது 31). இவர் நேற்று காலை தனது ஸ்கூட்டரில் ஒன்னட்டியில் இருந்து கோவில்மட்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென புதர் மறைவிலிருந்து வெளியே வந்த காட்டெருமை ஒன்று கிருஷ்ணகுமாரியைத் தாக்கியது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. உடனடியாக அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story