வாடிப்பட்டியில் நகை பறிப்பின் போது விழுந்ததில் பெண் படுகாயம்- 3 பேர் கைது


வாடிப்பட்டியில் நகை பறிப்பின் போது விழுந்ததில் பெண் படுகாயம்- 3 பேர் கைது
x

வாடிப்பட்டியில் நகை பறிப்பின் போது கீழே விழுந்த பெண் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

வாடிப்பட்டி

வாடிப்பட்டியில் நகை பறிப்பின் போது கீழே விழுந்த பெண் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ஆன்டோ பிரேயா (வயது 37). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி கேரமல்ஆனி (32) மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்திற்கு வந்தனர். அங்கு தங்குவதற்காக எதிரில் உள்ள விடுதியின் முன்பாக காரை நிறுத்தி பொருட்களை இறக்கி கொண்டிருந்தனர்.

அப்போது காரின் அருகே நின்று கொண்டிருந்த கேரமல் ஆனி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்களில் ஒருவர் பறித்தார். ஆனால் கேரமல்ஆனி அதை இறுக்க பிடித்துக் கொண்டார். இதனால் 1½ பவுன் நகையை மட்டும் பறித்து கொண்டு அவர்கள் தப்பி விட்டனர். இதில் கீழே விழுந்த கேரமல்ஆனி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

3 பேர் கைது

இந்த நிலையில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், உதயகுமார் மற்றும் போலீசார் சல்லக்குளம் பிரிவில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தடுத்தனர். ஆனால் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர்.

உடனே போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது அய்யங்கோட்டையை சேர்ந்த ஆகாஷ் (21), மதுரை கோச்சடையை சேர்ந்தவர்கள் விக்னேஷ் (23), அஜய் (20) என்றும் அந்த 3 பேரும் ஆரோக்கிய அன்னை திருத்தலம் முன்பு வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அந்த 3 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story