மின்சாரம் தாக்கி பெண் பலி
மின்சாரம் தாக்கி பெண் பலி
விருதுநகர்
ராஜபாளையம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராசு. இவரது மனைவி பாண்டி செல்வி(வயது 36) .இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கணவர் ராசு மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வீட்டில் மின்சாரம் துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகே இருந்த வீட்டில் இருந்து வயர் மூலம் மின்சாரத்தை இழுத்துள்ளார். அப்போது வயரில் இருந்து இரும்பு கதவில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அதை அறியாமல் பாண்டிச்செல்வி கதவை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் இவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக கூறினார். ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story