மின்னல் தாக்கி பெண் பலி
மின்னல் தாக்கி பெண் பலியானாா்.
காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகா எஸ்.மறைக்குளம் கிராமத்தை சேர்ந்த செல்லப்பா மனைவி ராமு (வயது 55), பாலமுருகன் மகன் வெற்றிவேல் (21), சிகப்பியம்மாள் (60) ஆகிய பேரும் எஸ்.மறைக்குளம் கிராமத்தில் உள்ள ராமு என்பவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. மழை பெய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் ராமு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். வெற்றிவேல், சிகப்பியம்மாள் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமுவை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். வெற்றிவேல், சிகப்பியம்மாள் ஆகிய 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.