பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பெண் பலி
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி தீப்பிடித்ததில் பெண் பலியானார்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி தீப்பிடித்ததில் பெண் பலியானார்.
பட்டாசு ஆலை
விருதுநகர் அருகே வி.ராமலிங்காபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையானது, வெடிப்பொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் பெற்றதாகும். இங்கு 43 பட்டாசு தயாரிக்கும் அறைகளும், 13 மருந்து அறைகளும் உள்ளன. நேற்று மதியம் வி.ராமலிங்காபுரம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
பெண் பலி
இதனால் வேலையை நிறுத்திவிட்டு தொழிலாளர்கள் வெளியேறினர். மதுரை மாவட்டம் வில்லூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவருடைய மனைவி புஷ்பமும் (வயது 52) அங்கு வேலைபார்த்து வந்தார். இவரும் ஆலையில் இருந்து செல்ல கதவுகளை பூட்டி கொண்டிருந்தார்.
3 கதவுகளை பூட்டி விட்ட நிலையில் 4-வது கதவை பூட்டியபோது திடீரென மின்னல் தாக்கியது. மருந்து அறை என்பதால் அறை உடனே தீப்பிடித்தது. அறைக்குள் இருந்த புஷ்பம் தீயில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுபற்றி வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த அறையை பார்வையிட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.