கார் மோதி பெண் பலி


கார் மோதி பெண் பலி
x

கார் மோதி பெண் பலி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள முனுசுவலசை பகுதியை சேர்ந்த முனியசாமி மனைவி மல்லிகா (வயது 38). இவரும், அதே பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி சசிகலா (48) என்பவரும் உப்பளத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று காலை உப்பளத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஏந்தல் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த சசிகலா சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் தென்காசி பொய்கை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (49) என்பவரை கைது செய்தனர்.


Next Story