ஆத்தூர் அருகே வீடு கட்டும் போது தவறிவிழுந்து பெண் பலி


ஆத்தூர் அருகே  வீடு கட்டும் போது தவறிவிழுந்து பெண் பலி
x

ஆத்தூர் அருகே வீடு கட்டும் போது பெண் ஒருவர் தவறிவிழுந்து பலியானார்.

சேலம்

ஆத்தூர்,

வீடு கட்டுமான பணி

ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி மண்ணுடையார் தெருவை சேர்ந்தவர் சின்னு. இவருடைய மனைவி ஸ்ரீதேவி (வயது 38). இவர் வீடு கட்டுமான பணிக்கு சென்று வந்தார்.

நேற்று மல்லியக்கரை அருகே உள்ள கோபாலபுரத்தில் தமிழ்ச்செல்வி என்பவருக்கு சொந்தமான வீடு கட்டும் பணிக்கு ஸ்ரீ தேவி சென்றிருந்தார். வீட்டின் இரண்டாவது மாடியின் மேலே சாரம் கயிறு கட்டி மாடியில் நின்று அவர் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

பலி

அங்கு கட்டப்பட்டிருந்த சாரம் பாதுகாப்பில்லாமல் கட்டப்பட்டு இருந்ததால் சாரத்தின் கயிறு திடீரென அறுந்து விழுந்தது. இதில் சாரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்த ஸ்ரீ தேவி கீழே தவறிவிழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு மல்லியக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மல்லியக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story