லாரி மோதி பெண் பலி
தூத்துக்குடியில் லாரி மோதி பெண் பலியானார்.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு கங்கா பரமேசுவரி காலனியை சேர்ந்தவர் ரோசாரி (வயது 60). இவருடைய மனைவி கிலன்சி (54). இவர்கள் தனது பேரன் ரியல்லோ (4) உடன் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி கடைக்கு சென்றனர். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் எட்டயபுரம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து புதூர்பாண்டியாபுரம் நோக்கி வந்த லாரி, மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்றது. இதில் நிலைதடுமாறியதில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் 3 பேரும் ரோட்டில் விழுந்தனர். அப்போது கிலன்சி மீது லாரி ஏறியது. இதில் கிலன்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரோசாரி, ரியல்லோ ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.