மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
x

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா (வயது 25). இவர் தனது தங்கை நித்யா கணேசன் (21) என்பவருடன் சிப்காட் அருகே உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலை தேடி மோட்டார் சைக்கிளில் சென்றாராம். மோட்டார் சைக்கிளை நித்யா கணேசன் ஓட்டி சென்றாராம். அவர்கள், மீளவிட்டான் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் சுஷ்மிதா, நித்யா கணேசன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுஷ்மிதா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story