மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலி


மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 15 March 2023 2:33 AM IST (Updated: 15 March 2023 4:04 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் மோதி பெண் இறந்தார்.

திருநெல்வேலி

மானூர்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பனம்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி மனைவி சீனியம்மாள் (வயது 52). இவர் வீட்டைவிட்டு வெளியேறி, கடந்த மாதம் 27-ந் தேதி, நெல்லை - சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் கானார்பட்டி விலக்கு பகுதியில் நடந்து சென்றார். அப்போது, சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளின் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானார். இதில் காயமடைந்த சீனியம்மாள் மானூர் போலீசார் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.


Next Story