பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயம் ஆனார்

கரூர்

தோகைமலை அருகே உள்ள குப்பாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் அபிநயா 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் அபிநயாவின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் வழக்கம்போல் மரம் வெட்டும் வேலைக்கு சென்றனர். இதனால் அபிநயா வீட்டில் தனியாக இருந்தார்.பின்னர் சக்திவேலும், அவரது மனைவியும் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அபிநயாவை காணவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அபிநயா கிடைக்கவில்லை.இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story