பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயம் ஆனார்.

கரூர்

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள காளியம்மன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 40). இவரது மனைவி செல்வி (35). இந்தநிலையில் செல்வி தனது கணவரிடம் கரூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பழனிசாமி தனது மனைவியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பழனிசாமி கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து, மாயமான செல்வியை தேடி வருகிறார்.


Next Story