பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயமானார்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை காலனி தெருவை சேர்ந்த ராஜகோபாலின் மகன் வேளாங்கண்ணி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சுபா(வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காலை வேளாங்கண்ணி கூலி வேலைக்கு சென்று விட்டார். இரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சுபாவை காணவில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து தா.பழூர் போலீசில் வேளாங்கண்ணி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து சுபாவை தேடி வருகிறார்.


Next Story