ரூ.97 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் பணி நீக்கம்


ரூ.97 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் பணி நீக்கம்
x

குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ.97 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் இயங்கி வருகிறது.

இங்கு கடந்த 2018-19-ம் ஆண்டுகளில் மேலாளராக உமாமகேஸ்வரி (வயது 38) பணியாற்றினார். அப்போது மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் வந்தன.

அதன்பேரில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் குடியாத்தம் வங்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மகளிர் சுயஉதவி குழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் கடன் மோசடி செய்தது தெரிய வந்தது.

விசாரணையில், அந்த சமயத்தில் வங்கி கிளை மேலாளராக பணியாற்றிய உமாமகேஸ்வரி இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து உமாமகேஸ்வரியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

அதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் உமாமகேஸ்வரியை பணிநீக்கம் செய்து மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story