2 குழந்தைகளுடன் பெண் மாயம்
2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்
திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). டிரைவர். இவரது மனைவி அழகுமணி (26). ஓட்டலில் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தகராறில் அழகுமணியை அரிவாள்மனையால் சதீஷ்குமார் வெட்டியுள்ளார். இதுதொடர்பான வழக்கு கோட்டை போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 31-ந்தேதி மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அழகுமணி, தனது கணவரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து சென்று விட்டார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை காணவில்லை. இதுகுறித்து அவருடைய கணவர் கொடுத்த புகாாின்பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.