3 வயது பெண் குழந்தையுடன் பெண் மாயம்
உளுந்தூர்பேட்டையில் 3 வயது பெண் குழந்தையுடன் பெண் மாயம்
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெய்வனை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் சிலம்பரசன்(வயது 28). இவருக்கும் இவரது அக்கா மகளான ராஜகுமாரி(24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ராஜகுமாரி கணவாிடம் கோபித்துக்கொண்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிலம்பரசன் மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இது குறித்து அவர் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் வழக்குப்பதிவு செய்து 3 வயது குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story