என்ஜினீயரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சாவு


என்ஜினீயரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சாவு
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே வீடுபுகுந்து என்ஜினீயரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே வீடுபுகுந்து என்ஜினீயரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்ஜினீயர்

திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகத்தை சேர்ந்தவர் எட்வின் (வயது28). டிப்ளமோ என்ஜினீயர். இவரது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். அதன்பின்பு தாயாருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான 47 வயது பெண் ஒருவர் மீது ஆசை இருந்து வந்தது. இதனால் அந்த பெண் வசித்துவந்த வீட்டு ஜன்னல் வழியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இதை கவனித்து வந்த அந்த பெண் எட்வினின் தாயாரிடம் அதுபற்றி கூறி கண்டித்துள்ளார். இதனால் அந்த பெண்ணை எட்வின் பழிவாங்க துடித்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி மதியம் அந்த பெண் அதே பகுதியில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து தனியாக கட்டிலில் படுத்திருந்தார்.

பாலியல் பலாத்காரம்

அப்போது எட்வின் இரும்பு கம்பியுடன் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கினார். இதில் மயக்கமடைந்த அந்த பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் எதுவும் நடக்காதது போல் அவர் தனது வீட்டுக்கு சென்றார். பெண்ணின் கணவர் வீடு திரும்பிய போது மனைவி ரத்த காயங்களுடன் அலங்கோலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

பின்னர் அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து அந்த ெபண்ணின் கணவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வெளியூருக்கு தப்பி ெசல்ல முயன்ற எட்வினை கடந்த 14-ந் தேதி மாலையில் ஆற்றூர் கழுவன்திட்டையில் வைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கம்பியால் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து எட்வினை போலீசார் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 (பி) ஆபாசமாகப்பேசுதல் (324), கொலை முயற்சி (307) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பரிதாப சாவு

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நினைவு திரும்பாத நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து எட்வின் மீது பதிவு செய்திருந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். கைதான எட்வினை போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைத்தனர்.

பெண்ணின் உடல் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க பெண்ணின் வீடு இருந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே எட்வினின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

பெண்ணை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை ெசய்த சம்பவம் திருவட்டார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story