பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே மளிகைக்கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 4½ பவுன் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே மளிகைக்கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 4½ பவுன் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

4½ பவுன் நகை பறிப்பு

களியக்காவிளை அருகே உள்ள மேக்கோடு பொன்னச்சான் விளையை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி சுனந்தகுமாரி (வயது 50). இவர் பனங்காலை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் கடையில் இருந்த போது, 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் முன் பகுதியில் இருந்த இருவர் ஹெல்மெட் அணிந்த நிலையிலும், பின்னால் இருந்த வாலிபர் ஹெல்மட் அணியாமலும் இருந்துள்ளார்.

பின்னால் இருந்த வாலிபர் சுனந்தகுமாரியிடம் 50 ரூபாய் கொடுத்து இரண்டு சிகரெட் வாங்கினார். அப்போது அவர் சுனந்த குமாரியின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் தாலி சங்கிலியை திடீரென அறுத்துக்கொண்டு, தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறினார். மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

போலீஸ் விசாரணை

இதுபற்றி சுனந்தகுமாரி களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்றது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து, தப்பி சென்றவர்களை தேடி வருகிறார்கள்.


Next Story