பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x

சேத்துப்பட்டில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், லாரி டிரைவர். இவரது மனைவி சுகந்தி (வயது 34)

இருவரும் சேத்துப்பட்டு நேரு தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் மண்டபம் முன்பு உறவினரிடம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் சுகந்தி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story