பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x

பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.

மதுரை

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி கவிதா (வயது 45). சம்பவத்தன்று இவர் செல்லூர் ஏ.வி.மேம்பாலம் பெண்கள் கல்லூரி அருகே மொபட்டில் சென்றார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார். அவர் கவிதா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். அப்போது அவர் கூச்சல் போட்டு கொண்டே அவரை விரட்டி சென்றார். அந்த நேரத்தில் சங்கிலி பறித்த ஆசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென்று நின்று விட்டது. எனவே அவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து கவிதா செல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story