ஸ்கூட்டரில் இருந்து விழுந்த பெண் படுகாயம்


ஸ்கூட்டரில் இருந்து விழுந்த பெண் படுகாயம்
x

ஸ்கூட்டரில் இருந்து விழுந்த பெண் படுகாயம்

கன்னியாகுமரி

புதுக்கடை,:

புதுக்கடை அருகே உள்ள ஆலுவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார். இவரது மனைவி செலின் மேரி (வயது49). இவர் சம்பவத்தன்று தனது ஸ்கூட்டரில் புதுக்கடை - ஐரேனிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். நெடுமானிகுளம் பகுதியில் வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி விடுவதற்காக திடீரென பிரேக் பிடித்தார். அப்போது ஸ்கூட்டர் நிலை தடுமாறி செலின் மேரி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story