சிவகிரி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை- தாய் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு


சிவகிரி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை- தாய் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு
x

சிவகிரி அருகே தாய் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

சிவகிரி

சிவகிரி அருகே தாய் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தாய் இறந்த துக்கம்

சிவகிரி அருகே உள்ள புது அண்ணாமலைபாளையத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 68). அவருடைய மனைவி மல்லிகா. இவர்களுடைய மகள் சிவசங்கரி (40). இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. ஆனால் 2 ஆண்டுகளிலேயே அவருக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மல்லிகா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்துவிட்டார். இது சிவசங்கரியை மிகவும் வேதனைப்படுத்தியது. தாய் இறந்த துக்கத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

பெண் தற்கொலை

இதனால் சிவசங்கரி மனம் உடைந்து காணப்பட்டார். கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்த அவர் மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் உடல் கருகிய நிலையில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவசங்கரி இறந்தார்.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story