வாடிப்பட்டி அருகே பெண் குத்திக்கொலை -கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
வாடிப்பட்டி அருகே பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
குடும்ப தகராறு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டகுளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 38). இவரது மனைவி பூங்கொடி (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பூங்கொடி மதுரையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பூங்கொடி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் அங்கிருந்தபடி வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு பூங்கொடி வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ்கண்ணன் அவரிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
குத்திக்கொலை
மேலும் ஆத்திரம் அடைந்த அவர் பூங்கொடியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பூங்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனை தேடி வருகின்றனர்.