பெண் போலீசின் கணவருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது


பெண் போலீசின் கணவருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
x

திருச்சியில் பெண் போலீசின் கணவரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

மலைக்கோட்டை, செப்.18-

திருச்சியில் பெண் போலீசின் கணவரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண் போலீசின் கணவர்

திருச்சி சிந்தாமணி காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 43). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர் திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் அண்ணா சிலையில் இருந்து போலீஸ் குடியிருப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் நீ யார்? இந்த நேரத்தில் எங்கு செல்கிறாய்? என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் போலீஸ் குடியிருப்பில் இருக்கிறேன். வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறிய போது வாக்குவாதம் ஏற்பட்டது.

கத்திக்குத்து

இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து கத்தியால் பாலகிருஷ்ணனை குத்திவிட்டு தப்பி சென்று விட்டனர். பலத்த காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து சிந்தாமணி புது தெருவை சேர்ந்த தினேஷ் என்கிற தினேஷ் குமார் (22), சிந்தாமணி பகுதியை சேர்ந்த மயில் தினேஷ் என்கிற தினேஷ்குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். பிரிஸ்டன் பத்ரி தெருவை சேர்ந்த முகில் என்கிற முகில் குமாரை (26) தேடி வருகின்றனர்.


Next Story