காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
கோட்டூர் அருகே காதல் திருமணம் செய்த பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருமக்கோட்டை;
கோட்டூர் அருகே காதல் திருமணம் செய்த பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
காதல் திருமணம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள விக்ரபாண்டியம் பகுதியை சேர்ந்தவர் கபிலன்( வயது27). இவரது மனைவி வினோபிரியா (24). இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு 4 வயதில் ஆண்குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கபிலன் தனது மனைவி மற்றும் குழந்தையை விக்கிரபாண்டியத்தில் தங்க வைத்து விட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வினோப்பிரியா விக்கிரபாண்டியத்தில் இ- சேவை மையம் நடத்தி வந்தார்.
விசாரணை
நேற்று காலை 7.30 மணி அளவில் அதே தெருவை சேர்ந்த ஒருவர் இ- சேவை மூலம் ஒரு வேைலக்காக வினோபிரியா வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். அப்போது கதவை திறந்த வினோப்பிரியா மகன் தனது தாய் தூக்கில் பிணமாக தொங்கியதை காட்டினான். இது குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் மற்றும் வினோப்பிரியாவின் கணவருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது.இது குறித்து வினோபிரியாவின் தந்தை மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வினோப்பிரியாவுக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் மன்னார்குடி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.