பெண்ணை தாக்கி கொலைமிரட்டல்


பெண்ணை தாக்கி கொலைமிரட்டல்
x

திருக்காட்டுப்பள்ளி அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மன்னார்சமுத்திரம், செட்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுஜாதா (வயது 32). இவருடைய கணவர் வீரப்பிள்ளை விவசாயி. இவருக்கும் அதே ஊரைசேர்ந்த அருண் என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில் அருண் (24), திருச்சி நடராஜபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (25) ஆகிய இருவரும் சேர்ந்து செட்டித்தோப்பில் உள்ள வீரப்பிள்ளை வீட்டுக்கு சென்று அவருடைய மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுஜாதா திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story