இடப்பிரச்சினையில் பெண் மீது தாக்குதல்
கபிஸ்தலம் அருகே இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே உள்ள அதியப்பநல்லூர் காலனி தெருவை சேர்ந்தவா் ஜெயராமன் மனைவி ஜெயசூர்யா(வயது23). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேந்திரன் (37) என்பவருக்கும் இடம் சம்பந்தமான பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் மகேந்திரன், ஜெயசூர்யாவை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஜெயசூர்யா கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story