குழந்தைகளுடன் பெண் தரையில் அமர்ந்து போராட்டம்
கந்திலி போலீசாரை கண்டித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு குழந்தைகளுடன் பெண் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
கந்திலி போலீசாரை கண்டித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு குழந்தைகளுடன் பெண் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டம்
திருப்பத்தூர் டவுன் அவ்வை நகர் பகுதியை சேர்ந்த பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் அப்புனு என்கிற ஏகாம்பரம் (வயது 54). இவரது மருமகன் புல் என்கிற ஜெயக்குமார் (35), கோழி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயக்குமாரை கந்திலி போலீசார் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கந்திலி போலீசார் ஜெயக்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஏகாம்பரம், அவரது மகள் மற்றும் இவரது குழந்தைகளுடன் கந்திலி போலீசாரை கண்டித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பெட்ரோல் ஊற்றி கொள்ள முயன்றனர்.
பரபரப்பு
அந்த சமயத்தில் அரசு மருத்துவமனையில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி திருப்பத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.