உடல் மீது பெட்ரோல் ஊற்றி பெண் முகவர்கள் போராட்டம்


உடல் மீது பெட்ரோல் ஊற்றி பெண் முகவர்கள் போராட்டம்
x

தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்றியதால் உடல் மீது பெட்ரோல் ஊற்றி பெண் முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

தூசி

செய்யாறில் தனியார் நிறுவனம் தீபாவளி சீட்டுகளை நடத்தி பல லட்சம் அளவில் பொதுமக்களிடம் பணம் திரட்டியது. இதில் முகவர்களாக செயல்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி அளிப்பதாக கூறி தனியார் நிறுவனம் அழைத்தது.

இதையடுத்து பெண் முகவர்கள் தனியார் நிதி நிறுவன அலுவலக வாயில் முன்பு இன்று கூடினர். ஆனால் நிறுவனம் சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண் முகவர்கள் நிறுவன சீட்டுகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உடனடியாக பணத்தை திருப்பி தர வலியுறுத்தி தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story