வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அவினாசி, குடிமங்கலம், மூலனூர், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் வட்டாரங்களில் தற்காலிகமாக 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய கணினி படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள், குறைந்தபட்சம் 2 ஆண்டு இதேபோன்ற திட்டங்களில் பணிபுரிந்து இருக்க வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். வட்டார ஒருங்கிணைப்பாளருக்கு ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். தகுதி வாய்ந்தவர்கள் இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், எண்.305, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் 641604 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 9-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421 2971149 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.