வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்


வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
x

வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் 6 வட்டாரங்களில் உள்ள 14 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்திடும் பொருட்டு தகுதி உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 1.9.2022 அன்றைய தேதியில் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் எம்.எஸ்.ஆபீசில் குறைந்தபட்சம் 6 மாத கணினி திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்ற திட்டங்களில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும், இப்பணிக்கான மதிப்பூதியம் ரூ.12 ஆயிரம் மட்டும் வழங்கப்படும். விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி மாலை 5 மணி வரை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கலெக்டர் அலுவலகம், அரியலூர்-621704 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story