தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்துபெண் கவுன்சிலர் போராட்டம்
புளியரையில், குடிநீர் கேட்டு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பெண் கவுன்சிலர் போராட்டம் நடத்தினார்.
தென்காசி
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தமிழக- கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் புளியரை ஊராட்சி மன்ற பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து கேட்டதற்கு அதிகாரிகள் சரியான பதில் கூறவில்லை என்று கூறியும், நேற்று புளியரை பஞ்சாயத்து 12-வது வார்டு உறுப்பினர் முத்துமாரி திடீரென புளியரை-கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் புளியரை போலீசார் உள்ளிட்டோர் விரைந்து வந்து முத்துமாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story