மாரண்டஅள்ளி அருகே செடிக்கு பயன்படுத்தும் மாத்திரையை தின்ற பெண் சாவு-போலீசார் விசாரணை


மாரண்டஅள்ளி அருகே செடிக்கு பயன்படுத்தும் மாத்திரையை தின்ற பெண் சாவு-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 11:23 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே செடிக்கு பயன்படுத்தும் மாத்திரையை தின்ற பெண் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவனை இழந்த பெண்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியனஅள்ளி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் பிரவீனா (வயது 25). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரவீனாவின் கணவர் சக்திவேல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானார். இதனால் அவர் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

பிரவீனா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் பிரவீனாவுக்கு வயிற்று வலி அதிகமானது.

செடிக்கு வைக்கும் மாத்திரை

அப்போது அவர் வீட்டில் இருந்த மாத்திரையை சாப்பிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், பிரவீனா தவறுதலாக செடிக்கு வைக்கும் மாத்திரையை தின்றது தெரியவந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பிரவீனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். செடிக்கு பயன்படுத்தும் மாத்திரையை தின்ற பெண் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story