இலவச வீட்டுமனை கேட்டு பெண்கள் முற்றுகை
இலவச வீட்டுமனை கேட்டு கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
கே.வி.குப்பத்தை அடுத்த பி.கே.புரம், குட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சுமார் 50 பெண்கள் கையில் மனுக்களுடன் திடீர் என்று கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன் இலவச வீட்டுமனை கேட்டு முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் பழுதடைந்த வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருவதாகவும், தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் மூலம் இல வசவீட்டு மனை கேட்டு பல முறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் கவனிக்கவில்லை என்று கூறினர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட கவுன்சிலர் அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மோகன், வருவாய் ஆய்வாளர் என்.டி.கண்ணன், கிராம நிர்வாக அதிகாரி ஜி.சங்கரன் உள்ளிட்டோர் சென்று பேச்சு வார்த்தை நடத்தி, மனுவை பெற்றுக்கொண்டு, இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.