உத்தனப்பள்ளி அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயம்


உத்தனப்பள்ளி அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயம்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே உள்ள மீசக்காரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி செல்வி (வயது 26). இவர்களுக்கு சரண் (10), அஜய் (4) என்ற மகன்களும், ஹேசாந்தி (8) என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. இந்தநிலையில் செல்வி தனது 3 குழந்தைகளுடன் கடந்த 29-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story