மழையில் நனைந்து கொண்டு நாற்றுநட்ட பெண்கள்
மழையில் நனைந்து கொண்டு நாற்றுநடும் பணியில்பெண்கள் ஈடுபட்டனர்.
நனைந்துகொண்டு நாற்றுநட்ட பெண்கள்
கோட்டூர்:
கோட்டூர்சுற்றுவட்டார பகுதிகளான விக்கிரபாண்டியம், ஆலத்தூர், குலமாணிக்கம், ஆதிச்சப்புரம், மழவராயநல்லூர், ரங்கநாதபுரம், பைங்காட்டூர் பாலையூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாளடி நடவுபணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருவதால் நடவு பணி பாதிக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் விவசாய தொழிலாளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டு நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் நடவு பணிகள் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதேபோல் நீடாமங்கலம், நன்னிலம், வடுவூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளங்கள் நிரம்பி வருகின்றன.