உதவிகலெக்டா் வாகனத்தை பெண்கள் முற்றுகை
திருநாகேஸ்வரம் அருகே மின்நிலையம் தரம் உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தொிவித்து உதவி கலெக்்டா் வாகனத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் போலீசார் பேச்சுவாா்த்தை நடத்தினர்.
திருவிடைமருதூர்;
திருநாகேஸ்வரம் அருகே மின்நிலையம் தரம் உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தொிவித்து உதவி கலெக்்டா் வாகனத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் போலீசார் பேச்சுவாா்த்தை நடத்தினர்.
துணை மின் நிலையம்
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சன்னாபுரத்தில் உள்ள துணை மின் நிலையம் தரம் உயர்த்தப்படும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை கொறடா கோவி.செழியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் சன்னாபுரம் ஆதிதிராவிடர் தெரு, கலைஞர் காலனி், வள்ளுவர் தெரு, புதுதெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரு மனுைவ அதிகாரியிடம் கொடுப்பதற்கு நிகழ்ச்சி நடைபெறும் மின் நிலையம் அருகே குவிந்திருந்தனர்.
முற்றுகை
அப்போது நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த உதவி கலெக்டா் லதாவின் வாகனத்தை அவர்கள் முற்றுைகயிட்டு சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் தங்களது மனு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மக்களிடம் உறுதியளித்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
நோய் ஏற்படும் அபாயம்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் இந்த பகுதியில் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்களது கிராமத்தில் சுமார் 220 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்களது தெருவின் மிக அருகில் ஏற்கனவே 33 கிலோ வாட் உயர் மின் அழுத்த நிலையம் உள்ளது. மேலும் அதன் பக்கத்தில் 110 கிலோ வாட் உடைய உயர் மின் அழுத்த நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஏற்பாடுகள் தயாராகி கொண்டிருக்கின்றன. இதனால் எங்கள் தெருவில் உள்ள குழந்தைகள், முதல் பெரியோர் வரை அனைவருக்கும் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் எங்களுக்கு உயிர் பயத்துடன் கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் 110 கிலோ வாட் உடைய உயர் மின் அழுத்த நிலையம் வேண்டாம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.