பாதை பிரச்சினை: சாலை நடுவில் கட்டிலில் படுத்தபடி பெண் போராட்டம்; ஆற்றூர் அருகே பரபரப்பு

பாதை பிரச்சினை: சாலை நடுவில் கட்டிலில் படுத்தபடி பெண் போராட்டம்; ஆற்றூர் அருகே பரபரப்பு
x

ஆற்றூர் அருகே பாதை பிரச்சினை காரணமாக சாலை நடுவில் கட்டிலில் படுத்தபடி பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

திருவட்டார்,

ஆற்றூர் அருகே பாதை பிரச்சினை காரணமாக சாலை நடுவில் கட்டிலில் படுத்தபடி பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதை பிரச்சினை

ஆற்றூர் அருகே கோனான்விளை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 58). இவர் கேரளாவில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கேத்ரீனா (55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களுடைய வீட்டிற்கு செல்லும் பாதை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பிரச்சினை உள்ளது. இந்தநிலையில் பிரச்சினைக்குரிய இடத்தின் பாதை சேதப்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

கட்டிலில் படுத்தபடி போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த கேத்ரீனா ஆற்றூர் காவின்குளம் சாலையின் நடுவே கட்டில் போட்டு அதில் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கேத்ரீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் எதிர்தரப்பை சேர்ந்தவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கேத்ரீனா போராட்டத்தை கைவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story