குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
x

பாளையங்கோட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை 32-வது வார்டு ஜோதிபுரம் நந்தனார் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தெரு பம்பும் பழுதடைந்து விட்டதாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் நேற்று காலி குடங்களுடன் தெரு முனைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story