குடிநீர்வசதி கேட்டு காலிகுடங்களுடன், கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை


குடிநீர்வசதி கேட்டு காலிகுடங்களுடன், கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை
x

குடிநீர்வசதி கேட்டு காலிகுடங்களுடன், கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

வேலூர்

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்து மண்டபம் டோபிகானா பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள் காலிகுடங்களுடன் திரண்டு கலெக்டர் மற்றும் மேயரிடம் கோரிக்கைகள் வைத்தனர். அப்போது, நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். குடிநீர் வசதிஇல்லை. தினமும் வெகுதூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் சூழ்நிலை உள்ளது. உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். மேலும் குடியிருப்புகளை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். இரவு நேரங்களில் மர்மநபர்கள் நடமாட்டத்தை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்றனர். அதற்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.


Next Story