விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை
திருப்பூர்
குன்னத்தூர்
திருச்சி மாவட்டம் காரபட்டியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கோமதி (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஏழுமலை குன்னத்தூர் கருங்கல்மேட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த கோமதி விஷம் குடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் கோமதியை கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி இறந்துள்ளார். இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
----
Related Tags :
Next Story