பிடாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்


பிடாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
x

பிடாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகே சேந்தன்குடி கிராமத்தில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கிராமத்தினர் தங்கள் வீடுகளில் பாத்திரங்களில் மண் நிரப்பி விதைகள் தூவி முளைப்பாரியை வளர்த்து வந்தனர். பின்னர் அந்த முளைப்பாரியை பெண்கள் எடுத்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக பிடாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 26-ந் தேதி மது எடுப்பு திருவிழா நடக்க உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story