குடிநீா் கேட்டு சாலை மறியலுக்கு முயன்ற பெண்கள்
நாங்குநேரி அருகே குடிநீா் கேட்டு பெண்கள் சாலை மறியலுக்கு முயன்றனர்.
திருநெல்வேலி
நாங்குநேரி:
நாங்குநேரி அருகில் உள்ள மஞ்சங்குளம் கிராமத்தில் சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள், பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், காலி குடங்களுடன் ஏர்வாடி- நாங்குநேரி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story