காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை


காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x

கங்கைகொண்டான் பஞ்சாயத்து அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் பஞ்சாயத்து அணைதலையூர், மறக்குடி, வடகரை நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று காலையில் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் கங்கைகொண்டான் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

உடனே கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி, பஞ்சாயத்து தலைவர் கவிதா பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.


Next Story