பெண்கள் தர்ணா
பெண்கள் தர்ணா
சேவூர்
அவினாசி ஒன்றியம் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணிகாடு பகுதியில் திட்டப்பணியில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபடுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை அ.ம.மு.க நிர்வாகிகள் மற்றும் தேவேந்திர நகரை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் சேவூர் ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட, மாவட்ட இயக்குனர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தாங்கள் கூறும் தேவேந்திரநகர், வெண்ணிகாடு பகுதியில், 2019 -2020-ம் ஆண்டு நடைபெற்ற திட்டபணி சம்பந்தமாக முறைகேடு நடந்திருந்தால், விசாரணை மேற்கொண்டு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்துசென்றனர்.